மாமனிதன்
கோ.சத்தியவாகீஸ்வரன், செயலாளர், ஓ.ப.சீ. நண்பர்கள் கழகம்
விடுதலை இயக்கங்களில் வரலாறு படைக்கும் நாயகர்கள், எக்காலத்திற்கும் நீடித்த புகழோடு திகழ்பவர்கள் உலக வரலாற்றில் ஒரு சிலர்தான். உலக வரலாற்றில் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் மன்னர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு மக்கள் ஆட்சிமுறைக்காகப் பாடுபட்டவர்களில் இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் வாஷிங்டனில் தொடங்கி கென்னடி வரை சொல்லலாம்.
பொதுவுடமை நாடுகளை எடுத்துக் கொண்டால் சோவியத் ரஷ்யாவில் லெனின், மக்கள் சீனத்தில் மாசேதுங், வியட்நாமில் ஒரு கோசிமின் என்று நாம் வரிசைப்படுத்தலாம்.
இதில் அமெரிக்காவைப் போன்ற நாடுகளின் தலைவர்கள் கையாண்ட முறைக்கும் பொதுவுடமை நாடுகளின் தலைவர்கள் கையாண்ட முறைக்கும் நிறைய வேறுபாடு உண்டு.
இன்று மட்டுமல்ல என்றுமே நிலைத்து நிற்கக் கூடிய வீரவரலாறாகத் திகழ்வது பொதுவுடமை நாடுகளின் தலைவர்கள் கையாண்ட முறைதான்.
அந்த முறைதான் இன்று உலகை உய்விக்கும் முறையாக, ஆதிக்க சக்தியாக அடித்து நொறுக்கி ஆக்கரீதியில் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் முறையாகத் தோன்றுகிறது.
எனக்கு அடிக்கவும் தெரியும், அன்பு செலுத்தவும் தெரியும் என்ற வீர காவியத்தின் இலக்கணமாகத் திகழும் பொதுவுடமைத் தத்துவத்தின் பொக்கிஷம்தான் ரஞ்சன் என்று அன்புடன் அழைக்கப்பட்ட நமது பத்மநாபா அவர்கள்.
ஆயுதப்போராட்டமா! எதிரியே வா! - அமைதித் தீர்வா! அன்பர்களே வாருங்கள்! என்று தான் ஒரு உண்மையான விடுதலை வீரன் சொல்வான் இந்த வகையிலும் நமது ரஞ்சன் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
எனக்கு ஆயுதம்தான் தூக்கத் தெரியும்ளூ அதுதான் முடியும்ளூ அதுதான் ஓரே வழிளூ வேறு வழியே இல்லை என்று சொல்பவன் உண்மையான விடுதலை வீரனாக இருக்க முடியாது.
வீரமும் வேண்டும். அதில் விவேகமும் வேண்டும். அவற்றைத் தருணமறிந்து பிரயோகிக்கும் தமைமையும் வேண்டும்.
இந்த மூன்று கூறுகளும் நிறைந்தவன் தான் மனித சமுதாய வரலாற்றில் ஏகோபித்த வரவேற்பைத் பெறமுடியும். இந்த வரவேற்பை எதிர்காலத்தில் முழுமையாகப் பெற்றுத் திகழ இருந்தவர்தான் நமது அஞ்சாநெஞ்சன் ரஞ்சன்!
அவரை நேரில் கண்டவர்களுக்கு, பேசிப் பழகியவர்களுக்குத்தான் அவர் எவ்வளவு பெரிய மகிமைக்கு உரியவர் என்பது தெரியும்.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அளந்துவிடும் ஆற்றல் மிக்கவர்! பார்வையில் மித மிஞ்சிய கூர்மைபெற்றவர்! சரித்திரம் படைக்கும் உத்தமர்களுக்குரிய அத்தனை அம்சமும் ஒருங்கே அமையப் பெற்றவர்!
இலங்கைத் தமிழினத்திற்கு அவரால்தான் உண்மையான விடுதலை கிடைக்க இருந்தது. தமிழீழத்தின் உயர்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் இன்றைய தமிழக முதல்வருமான டாக்டர் கலைஞர் அவர்கள் பெரிதும் துணை நிற்பார்கள் என்று கருதினார்.
கலைஞரின் துணை, தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே துணை நிற்பதற்கு சமம் என்று நம்பினார்.
கலைஞரும் நமது ரஞ்சன் மீது தனி மரியாதையும் அன்பும் வைத்திருந்தார். ஆனால் விடுதலைப் புலி இயக்கத்தைச் சுட்டிக்காட்டி, கலைஞர் - ரஞ்சன் இடையே இங்குள்ள உள்ளுர் அரசியல்வாதிகள் இடைவெளியை அதிகப்படுத்த முயற்சித்தார்கள்.
அதன் விளைவு கேள்விக் குறியாகவே நின்றுவிட்டது. உண்மை இன்று யாருக்கும் தெரியாது.
ரஞ்சனின் குறிக்கோள் தமிழ்நாட்டின் அரசியல் சகதியில் சிக்குவது அல்லளூ ஈழத்தின் விடுதலை! தமிழ் மக்களின் விடுதலை! சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அந்த விடுதலைக்குப் பாடுபடுவதுதான், அவரைப் போற்றுவதற்கும் அவரது வழியில் நடப்பதற்கும் உரியதாகும்.
என்னைப் பொறுத்தவரையில் ஒரு பேரன்பு கொண்ட மாமனிதரை இழந்துவிட்ட நிலையில் தவிக்கிறேன்! பார்ப்பதற்கு இனியவர்! பேசுவதற்கும் இனியவர்! பழகுவதற்கும் இனியவர்!
முதன் முதலாக 1978ம் ஆண்டு ஈரோஸ் இயக்கம் சார்பில் சென்னையில் செயல்பட்டு வந்த திரு. அழகிரியின் தொடர்பு எனக்கு கிடைத்து. பின்னர் அந்த இயக்க நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதில் என்னுடன் அதிகமாகத் தொடர்பு வைத்தவர்தான் திரு.பத்மநாபா அவர்கள்.
பல நாட்கள் பட்டினி கிடந்தாலும் யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். எப்போதுமே ஈழப் பிரச்சினை பற்றிப் பேசுவார். அதன் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இயக்க வேலைகளை கவனித்தார்.
சிறீசபாரத்தினம், உமாமகேஸ்வரன், பிரபாகரன், சின்னபாலா மற்றும் இயக்கத் தலைவர்களைச் சந்தித்து இலங்கைப் பிரச்சினையை ஒன்றுபடுத்தி வெல்ல பல நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கு துரோகம் இழைத்தவர்களை எல்லாம் கொடுமைப்படுத்திக் கொல்ல நினைக்காமல் அன்புடன் அவர்களை அழைத்து, நீங்கள் செய்கின்ற தவறு ஈழத்திற்குச் செய்கின்ற துரோகமாகத்தான் நான் நினைக்கிறேன் என்று கூறி அனுப்பி விடுவார்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா இயக்கத் தலைவர்களின் ஆதரவும் தனக்கு வேண்டும். யாரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல என்று அடிக்கடி என்னிடம் கூறுவார்!
ஒருமுறை அனைத்து கட்சி தலைவர்களைச் சந்திக்க என்னையும் திரு. கிருபா (மறைந்த நிதி அமைச்சர்) அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்களில் ஒருவரான திரு. யசோதா அவர்களை முதன் முதலாக பார்த்தபோது அவர்கள் ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களைப் பார்த்து ஈழப் பிரச்சனை பற்றி பேசியது இல்லை. நீங்கள்தான் முதன் முதலாக எங்களைச் சந்திக்கிறீர்கள் என்று சந்தோஷப்பட்டார்கள்.
இலங்கையில் தமிழ் மாநில முதலமைச்சர் பொறுப்பை எல்லோரும் திரு. பத்மநாபாதான் ஏற்க வேண்டும் என்று கூறியபோது அந்த பதவியை திரு. வரதராஜப் பெருமாள் அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்று கூறினார்.
தனது திருமணத்தை வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என பலர் சொல்லிய போது திருமணம் என் வாழ்க்கையின் தனிப்பட்ட பகுதி. இதை மிக எளிமையாக நடத்தினால் போதும் என்று சொன்னார்.
அமைதிப்படை இந்தியா திரும்பியபோது அகதியாக வந்த திரு. பத்மநாபா சென்னைக்கு வந்தபோது என்னை அழைத்துப் பேசினார். இலங்கைப் பிரச்சினை பற்றிப் பேசும்போது எல்.டி.டி.யினர் ஸ்ரீலங்கா அரசை மறந்துவிட்டு எங்களை எதிரியாக நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் எதிரி யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஈழத்தமிழ் மக்களின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டு எல்.டி.டியினர் கேட்கும் எதையும் கொடுக்கத் தயாராகவே இருந்தோம் - இருக்கிறோம். ஈழத்தில் தமிழர்கள் அழிவதை என்றுமே நாங்கள் விரும்பவில்லை என்றார். ஆனால் -
ஈழத்தின் விடுதலை, ஈழ மக்களின் விடுதலைக்காகத் தன் குடும்பம், உறவுகளை எல்லாம் விட்டுவிட்டுத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபட்ட அவரை இதயம் இல்லாத புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றதை நினைக்கும்போது நான் வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.
எனவே, தங்கள் இயக்கத் தலைவரை, நல்ல உள்ளம் கொண்ட தன்மானச் சிங்கத்தை இழந்து தவிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் திரு. பத்மநாபாவின் ஆசைகளை நிறைவேற்ற ஒற்றுமையுடன் நின்று செயல்பட்டு, ஈ.பி.ஆர்.எல்.எப் மூலம் தனி ஈழம் கிடைத்தது என்ற பெருமை ஏற்பட ஒன்றுபட்டுச் செயல்படுமாறு அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன்.